கோவில்பட்டி நாடார் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி
கோவில்பட்டி நாடார் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி – முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு, அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கிப் பேசினார்.
கோவில்பட்டி நாடார் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்1 பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா இன்று நடந்தது.நிகழ்ச்சிக்கு, நாடார் உறவின்முறை சங்கத் துணைத் தலைவர் செல்வராஜ் தலைமையில் பொருளாளர் சுரேஷ்குமார், பள்ளி செயலாளர் வக்கீல் ரத்தினராஜா ஆகியோர் முன்னிலையில் பள்ளித் தூத்துக்குடி அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு, பள்ளியில் பிளஸ்1 பயிலும் 327 மாணவ, மாணவிகளுக்கு, அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கிப் பேசினார்.






கருத்துகள் இல்லை