கோவில்பட்டி அருகே மினி வேனில் 700 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்த 2 பேரை கயத்தார் போலீசார் கைது செய்தனர்.
கோவில்பட்டி அருகே சாலைப்புதூர் டோல்கேட்டில் நூதன முறையில் லோடு மினி வேனில் 700 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்த 2 பேரை கயத்தார் போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தார் தேசிய நான்குவழிச்சாலையில் உள்ள சாலைப்புதூர் டோல்கேட்டில் இன்று காலையில் கயத்தார் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக லோடு மினி வேன் ஒன்று வீட்டு சாமான்களை ஏற்றிய படி வந்தது. வண்டிக்கு முன்பாக ஒருவர் பைக்கில் வழிகாட்டியபடி வந்துள்ளனர். லோடு மினி வேனை நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். அப்போது அந்த வாகனத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சுமார் 700 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், லோடு மினி வேனை ஓட்டி வந்த டிரைவர் திருப்பூர் மாவட்டம் அவினாசிபாளையத்தைச் சேர்ந்த நாராயணசாமி மகன் ராஜேஷ் கண்ணன்(26), அவருக்கு வழிகாட்டியபடி வந்த தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையைச் சேர்ந்த பாண்டி மகன் ஜோஸ்வாராஜா(27) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் 700 கிலோ புகையிலை பொருட்கள், லோடு வண்டி மற்றும் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கயத்தார் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தகுமார் வழக்கு பதிவு செய்து ராஜேஷ் கண்ணன் மற்றும் ஜோஸ்வாராஜா ஆகியோரை கைது செய்து கோவில்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
புகையிலை கடத்தி வருவது தெரியாமல் இருக்க வீட்டு சாமன்களை ஏற்றி வருவது போல் நூதன முறையில் கொண்டு வந்து போலீசாரிடம் மாட்டிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது






கருத்துகள் இல்லை