• சற்று முன்

    செய்யாறில் த.வெ.க.,வின் புதிய அலுவலகத்தை மாவட்ட செயலாளர் உதயகுமார் திறந்து வைத்தார் !

    செய்யாறு நகரில் த.வெ.க.,வின் மத்திய ஒன்றியத்தில் புதிய அலுவலகத்தை, திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளர் உதயகுமார் நேற்று குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

    திருவண்ணாமலை மாவட்டம், த.வெ.க.,வின் கிழக்கு மாவட்ட செயலாளராக உதயகுமார் இருந்து வருகிறார். இவரது பொறுப்பில் செய்யாறு சட்டசபை தொகுதியும் வந்தவாசி சட்டசபை தொகுதியும் இருந்து வருகிறது. மாவட்ட செயலாளர் அலுவலகம் செய்யாறில் உள்ள புறவழி சாலையில் இயங்கி வருகிறது இந்த அலுவலகத்தில் தான் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் தங்களது கட்சி பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் செய்யாறு மத்திய ஒன்றியத்திற்கு புதிய செயலாளராக புவனேஸ்வரி கடத்த சில நாட்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டுள்ளார்.

    இவரது தலைமையில் செய்யார் மத்திய ஒன்றியத்தில் 500க்கும் மேற்பட்ட பெண் நிர்வாகிகள், தொண்டர்கள் இருந்து வருகின்றனர். பெண் நிர்வாகிகளும் செய்யாறில் தங்களது கட்சியை பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் புதிய அலுவலகத்தை உடனடியாக திறக்க வேண்டும் என,  புவனேஸ்வரி ஆலோசித்து வந்தார். இதை அடுத்து செய்யாறு நகரத்துக்கு உட்பட்ட கீழ்புதுப்பாக்கம் கிராமத்தின் மெயின் ரோட்டில் த.வெ.க.,வின் புதிய அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது. திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளர் உதயகுமார், புதிய அலுவலகத்தை நேற்று குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய, வட்ட பொறுப்பாளர்கள், தொண்டர்கள் என, 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். செய்யாறு மத்திய ஒன்றிய செயலாளர் புவனேஸ்வரி ஏற்பாட்டில் பல்வேறு மாற்றுக் கட்சிகளை சேர்ந்த 50 பெண்கள்,  மாவட்ட செயலாளர் உதயகுமார் முன்னிலையில் புதிய அலுவலக திறப்பு விழாவில் த.வெ.க.,வில் இணைந்தனர். இந்த புதிய தொண்டர்களுக்கு மாவட்ட செயலாளர் உதயகுமார் சால்வை அணிவித்து வரவேற்றார்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad