ஆம்பூர் அடுத்த திருமலைக் குப்பம் ஊராட்சியில் வைகுண்ட ஏகாதசி விழாசிறப்பாக நடைபெற்றது
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் சொர்க்கவாசல் திறக்கும் பொழுது பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தலையில் வைர கிரீடம் சூட்டப்பட்டு மற்றும் பொன் ஆபரணங்கள் வெள்ளி ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சொர்க்கவாசல் விழாவில் 7 வாசல்கள் கடந்த பகவான் அலங்காரம் சேவை தரிசனம் மற்றும் வடக்கு வாசல் வழியாக சிறப்பு தரிசனம் கோவில் நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர்
மேலும் கோவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடம் இத்திருக்கோயில் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் சோழர்களின் சிற்றரசன் கலிங்கத்துப்போரில் அனந்த வர்மனை வெற்றி கொண்ட வண்டையார் கோன் கருணாகர தொண்டைமான் குறு நில மன்னரால் இங்கு கோயில் எழுப்பப்பட்டதாகவும், அவர்களின் வழி தோன்றல் திருவேங்கட கவுடு அவர்களின் மனைவிக்கு பார்வை குறைவு ஏற்பட்டுள்ள காலத்தில் பகவானால் பார்வை குறைவு சரிசெய்யப்பட்தாகவும் அதனால் கோயில் முன்புறம் நீண்ட தீபஸ்தம்பம் நடப்பட்டு பூஜைகள் செய்து வந்ததாகவும் இங்கு வேண்டி கொள்பவர்களுக்கு திருமண தடை நீங்கி திருமணம் நடைபெறுவதாகவும் கர்ண பரம்பரை கதைகள் மூலம் அறியப்படுகிறது. இத்தனை சிறப்பு மிக்க புராதன கோயில் வளர்ச்சிக்கு பொருளுதவி வழங்கி வருகிறது
இந்த சொர்க்கவாசல் விழாவுக்கு சென்னை வேலூர் திருப்பத்தூர் ஜோலார்பேட்டை வாணியம்பாடி ஆம்பூர் பல நகரங்கள் மற்றும் மாதனூர் ஒடுக்கத்தூர் திருமலை குப்பம் பாலூர் கூத்தம்பாக்கம் தேவிகாபுரம் வளையல்கார் பட்டி அகரம் குருராஜபாளையம் கரடிகுடி பல்வேறு கிராமங்களில் இருந்து கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்






கருத்துகள் இல்லை