வேலூர் மாநகராட்சி காட்பாடி உழவர் சந்தையில் பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வு நிகழ்ச்சி!
வேலூர் மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில், மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர், மாநகர நல அலுவலர் அறிவுறுத்தலின் பேரிலும், வேலூர் மாநகராட்சி, காட்பாடி 1வது மண்டலம், காட்பாடி உழவர் சந்தையில் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் சுகாதார அலுவலர் டாக்டர் சிவக்குமார் தலைமையில், பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்... மஞ்சப்பையை கையில் எடுப்போம், பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் பயன்படுத்தினால் வரக்கூடிய நோய்கள் குறித்தும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். துப்புரவு ஆய்வாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள், அனிமேட்டர்கள் உடன் இருந்தனர்.






கருத்துகள் இல்லை