வாலாஜா சார் பதிவாளர் அலுவலகத்தில் லோகேஷ் என்ற உதவியாளர் புரோக்கர் போன்று வசூல் செய்யும் அவலம்: நடவடிக்கை எடுப்பாரா பத்திரப்பதிவுத்துறை ஐஜி!
வாலாஜா சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளராக பணிபுரிபவர் செந்தில்குமார். இவர் இந்த அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் லோகேஷ் என்பவரை புரோக்கராக மாற்றி வைத்துள்ளார். இவர்தான் மாமூல் பணத்தை வசூல் செய்வது மற்றும் மாமூல் பணத்தை கொண்டு வெளியில் இருந்து வரும் வேற்று நபர்களுக்கு கப்பம் கட்டுவது என்று ஏ டூ இசர்ட் என்று அனைத்து பணிகளையும் செய்து வருகிறார். இந்நிலையில் லோகேஷ் என்பவர் விடுமுறை என்றால் எந்த பணியும் நடைபெறாமல் அப்படியே அலுவலகமே ஸ்தம்பித்து விடுகிறது. அப்படி என்றால் இந்த புரோக்கரின் அடித்தளம் மிகவும் பலமாக உள்ளது என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது என்கின்றனர்
பொதுமக்களும் இந்த அலுவலகத்திற்கு வந்து செல்லும் சமூக ஆர்வலர்களும். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் லோகேஷ் இல்லை என்றால் இந்த அலுவலகம் செயல்படாது போலிருக்கிறது என்று அடித்துக் கூறலாம். அந்த அளவிற்கு இவரது செயல்பாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என்கின்றனர் நன்கு விவரம் அறிந்த பொதுமக்கள். யார் சென்று சார் பதிவாளர் செந்தில்குமாரை சந்தித்தாலும் லோகேஷை சென்று பாருங்கள் அவர் அனைத்தையும் பார்த்துக் கொள்வார் என்று அவரிடம் அனுப்பிவிட்டு தனக்கு எந்த பொறுப்பும் இல்லை என்ற அளவில் கழுவும் மீனில் நழுவும் மீனாக இருக்கிறார் சார் பதிவாளர் செந்தில்குமார். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வாலாஜா சார் பதிவாளர் அலுவலகத்தின் மீது ஒரு கண் வைத்தால் பல திமிங்கிலங்கள் கிடைக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு வாலாஜாவில் லஞ்சம் கரைபுரண்டு ஓடுகிறது. லஞ்ச பணத்திலேயே பல்வேறு பணிகள் நடைபெறுவது ஊர்ஜிதம் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து செய்திகள் எதுவும் வெளியிடாமல் இருப்பதற்கு செய்தியாளர்களுக்கு தலா ரூ.300 இனமாக வாரி வழங்கப்படுகிறது தாராளமாக என்று சொன்னால் அது மிகையாகாது.
சிறிய மீனை போட்டுவிட்டு பெரிய மீனை சாப்பிட்டு ஏப்பம் விடுகின்றனர் இந்த வாலாஜா சார் பதிவாளர் அலுவலகத்தில் உள்ள சார் பதிவாளர் முதல் அலுவலக உதவியாளர்கள் வரை என்று சொன்னால் அது நிதர்சன உண்மை. இப்படி வாலாஜா சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சமோ லஞ்சம் என்ற நிலை அவலத்தின் உச்சகட்டத்தை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதை மாவட்ட நிர்வாகமோ அல்லது சார் பதிவாளர் பதவிக்கு உயர் பதவியில் உள்ள ஐஜி போன்ற உயர் அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.
குறிப்பாக இந்த அலுவலகத்தில் அப்படி என்ன சிதம்பர ரகசியம் உள்ளது என்பதை வெளியுலகுக்கு கொண்டு வருவதற்கு செய்தித்துறை தனது பங்கை தவறாது ஆற்ற வேண்டும் என்று பொதுநல விரும்பிகள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். தமிழக அரசும் இதுபோன்ற சார் பதிவாளர்கள் மீது தயவு தாட்சண்யம் காட்டாமல் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த பொதுமக்களின் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி வாலாஜா சார் பதிவாளர் மீது சாட்டையை சுழற்றுவாரா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
செய்தியாளர் : வாசு தேவன்
கருத்துகள் இல்லை