குடியாத்தம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் நாடு போற்றும் 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா அடுத்த வளத்தூர் கிராமத்தில் ஒன்றிய செயலாளர் (மேற்கு )கல்லூர் கே. ரவி தலைமையில், ஒன்றிய பொருளாளர் டி.வி. சேகரன் வரவேற்புரை ஆற்றினார். மாநில அமைப்பு சாரா ஓட்டுநர் அணி தலைவர் டி. எம் .கதிர் ஆனந்த் எம். பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இவ்விழாவில் நான்கு ஆண்டு சாதனைகளை பொதுமக்கள் மத்தியில் மிகச் சிறப்பாக பேசி விழிப்புணர்வை ஏற்படுத்தி மெய் சிலிர்க்க வைத்தார். மாநில மகளிர் அணி பிரச்சார குழு செயலாளர் குடியாத்தம் எம். எல். ஏ. அமுலு விஜயன், தலைமை கழக பேச்சாளர் சொ. ஆரோக்கியராசு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே. இராஜமார்த்தாண்டன், ஒன்றிய குழு தலைவர் வடக்கு ஒன்றிய செயலாளர் எம். கே. சத்யானந்தம், நகர மன்ற தலைவர், நகர செயலாளர், மாவட்ட துணைச் செயலாளர் ஜி. எஸ். அரசு, கிழக்கு ஒன்றிய செயலாளர் நத்தம் வி. பிரதீஷ் பேசினர். இறுதியில் மாவட்ட பிரதிநிதி ஜெ. விஜயகுமார் நன்றி கூறினார். இவ்விழாவில் கட்சி பொறுப்பாளர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வாசு தேவன்
கருத்துகள் இல்லை