காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவத்தில் மீண்டும் துவங்கியது வடகலை தென்கலை பிரச்சனை.
இரண்டாம் நாளான இன்று காலையில் வரதராஜ பெருமாள் அம்ச வாகனத்தில் எழுந்தருளி காஞ்சிபுரம் நகரின் முக்கிய வீதிகளில் வீதி உலா வந்தார். கங்கை கொண்டான் மண்டபத்தில் மண்டகப்படி கண்டருளிய போது பெருமாளின் முன்பு பூஜையின் போது கலகலப் பிரிவினரான தாத்தாச்சாரியார்கள் மந்திர புஷ்பம் பாடுவது வழக்கம்.
இந்நிலையில் தென்கலை பிரிவு பிரபந்தம் பாடுவதில் உள்ள உரிமை நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தென் கலை பிரிவினர் பெருமாள் முன்பு ததாச்சாரியார்கள் மந்திர புஷ்பம் பாடுவதில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் தென்கலை பிரிவினர் பாட்டு பாடி இடையூறு ஏற்படுத்து கின்றனர்.இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பெருமாளின் முன்பு இரு பிரிவினரும் வாக்குவாதத்தில் நாள்தோறும் ஈடுபடும் சம்பவம் பக்தர்களிடையே முகச்சுழிப்பை ஏற்படுத்தி உள்ளது.
கருத்துகள் இல்லை