• சற்று முன்

    காஞ்சிபுரம் அருள்மிகு சித்ரகுப்த சுவாமி திருக்கோவில் சித்ரா பௌர்ணமி திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.*

     

    காஞ்சிபுரத்தில் மட்டுமே கோவில் கொண்டுள்ள பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் அருள்மிகு சித்ரகுப்த சுவாமி திருக்கோவில் சித்ரா பௌர்ணமி திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.*

    ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பாவங்களைப் கழித்து புண்ணியங்களை சேர்க்க பொதுமக்கள் நோட்டுப் புத்தக பேனாவை அள்ளித்து வழிபட்டனர்

    உலகில் உள்ள ஜீவராசிகளின் பாவ புண்ணிய கணக்குகளை எழுதுபவராக கருதப்படுபவர் சித்ரகுப்த சுவாமி.

    சித்ரகுப்த சுவாமிக்கு இந்தியாவில் வேறு எங்கும் கோவில்கள் இல்லாத நிலையில் புண்ணிய நகரம்,முக்தி தரும் நகரம், நகரேஷூ காஞ்சி, என விளங்கும் கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் பஸ் நிலையம் அருகே உள்ள நெல்லுக்கார தெருவில் சித்ரகுப்தர் சுவாமி தனி சன்னதியில் கோவில் கொண்டு அருள் பாலித்து வருகிறார். கேது தோஷம், கலத்தர தோஷம், வித்யா தோஷம், புத்திர தோஷம், நிவர்த்தியாகும் திருத்தலமாக விளங்கி வருகிறது.

    இத்தகைய பழமையான இத்திரு கோவில் சித்ரா பௌர்ணமி ஒட்டி ஶ்ரீ கர்ணகி அம்மாள் உடனுறை அருள்மிகு சித்திரகுப்தர் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.   பக்தர்கள் தங்கள் பாவ கணக்கை நீக்கி புண்ணிய கணக்கை சேர்த்துக் கொள்வதற்காக புதிய நோட்டு மற்றும் பேனாக்கள் சுவாமிக்கு வழங்கி தரிசனம் செய்து வருகின்றனர். உற்சவ சித்திரகுப்தர் மற்றும் கர்ணகி சாமிக்கு திருமணம் நடைபெற்று பொதுமக்கள் தரிசனத்திற்காக கேட்கப்பட்டுள்ளனர். 

    சித்ரா பவுர்ணமி ஒட்டி சித்ர குப்தர் கோவிலில் அதிகாலையில் இருந்தே நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்


    செய்தியாளர் : தினேஷ் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad