• சற்று முன்

    ஆம்பூர் அருகே பெரியவரிக்கம் ஸ்ரீ கங்கை அம்மன் கோயில் கும்பாபிஷேக மிக சிறப்பாக நடைபெற்றது.

     

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பெரியவரிக்கம் கிராமத்தில் ஸ்ரீ கங்கை அம்மன்  கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    கடந்த 01.05.2025  வியாழக்கிழமை அன்று கணபதி ஹோமம், கோ பூஜையுடன் முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இரண்டாம் நாள் 02.05.2025 வெள்ளிக்கிழமை காலை இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

    மூலவருக்கு விசேஷ திருமஞ்சனம், அஷ்டபந்தனம் சாற்றுதல், பூர்ண ஹூதியுடன் தீபாராதனையும் நடந்தது. காலை நான்காம் காலயாக சாலை பூஜையுடன் துவங்கியது சதுர்வேத பாராயணம் கடம் புறப்பாட்டுடன் நிகழ்ச்சிகள் துவங்கியது.

    காலை 09.30 முதல்10.30மணிக்கு ஸ்ரீ கங்கை அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.  கும்பாபிஷேக விழா நிகழ்ச்சியில் பெரியவரிக்கம் தேவலாபுரம் துத்திப்பட்டு  சின்னவரிக்கம் அயித்தம்பட்டு நரியம்பட்டு மிட்டாளம் வெங்கடசமுத்திரம் சோமலாபுரம்  ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு மகா அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது.

    கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை பெரியவரிக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சி‌. சின்ன கண்ணன் தலைமை தாங்கினார் முன்னிலை ஊர் நாட்டாமை. வேல்முருகன், உதவி நாட்டாமை. குபேந்திரன், பொருளாளர். ராஜேஷ்,துணைத் தலைவர்.சி. சதீஷ், ஒன்றிய குழு உறுப்பினர். திருக்குமரன், சிறப்பு அழைப்பாளர் மேலாளர். தயாளன், முன்னாள்.தலைவர் பாஸ்கர், ஆன்மிக செம்மல். மனோகர், ராஜீவன் பெட்ரோல் உரிமையாளர். சாய் வெங்கடேசன், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் வி.அமுலுவிஜயன்,பேரணாம்பட்டு தெற்கு ஒன்றிய கழக செயலாளர்.எம் டி .சீனிவாசன், மாவட்ட பிரதிநிதி பொன் ராஜன்பாபு, மற்றும் ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    செய்தியாளர் :திருமலை 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad