தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் சார்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தின் முன்பு மூன்றாவது நாளாக காத்திருப்பு ஆர்ப்பாட்டம்
கோடைகால விடுமுறை வழங்க கோரியும் காலி பணியிடங்களை நிரப்ப கோரியும் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் சார்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தின் முன்பு
இன்று மூன்றாவது நாளாக காத்திருப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறதுஇந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர் மேலும் அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் கூறும் பொழுது தமிழ்நாடு அரசு பெரிய குழந்தைகளுக்கு விடுமுறை அளிக்கிறது ஆனால் சிறிய பிள்ளைகள் எப்படி இந்த கோடைகாலத்தில் அங்கன்வாடி மையத்திற்கு வருவார்கள் அவர்களுக்கும் விடுப்பு வழங்க வேண்டும் அவர்களுக்கு விடுப்பு வழங்கினால் எங்களுக்கு அங்கு பணி இருக்காது அதனால் தங்களுக்கும் விடுமுறை இருக்கும் அது போல தமிழகம் முழுவதும் காலி பணியிடங்கள் நிறைய நிரப்பப்படாமல் இருக்கிறது துறை சார்ந்த அமைச்சர் அதனை கவனத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய இல்லாவிட்டால் எங்களது ஆர்ப்பாட்டம் எத்தனை நாட்கள் ஆனாலும் தொடரும் அடுத்தடுத்த கட்டங்களில் நாங்கள் மேலும் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துச் செல்வோம் என தெரிவித்தனர் மல்லிகா பேகம் திருச்சி மாவட்ட தலைவர் அங்கன்வாடி ஊழியர் சங்கம்
செய்தியாளர் : சபரி
கருத்துகள் இல்லை