காஞ்சிபுரம் அடுத்த நத்த பேட்டை பகுதியில் உள்ள ஷெரின் கேத்ராவில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி நுழைவாயில் கேட் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே. சண்முகம் துவக்கி திறந்து வைத்தார்.
காஞ்சிபுரம் அடுத்த நத்த பேட்டை பகுதியில் உள்ள ஷெரின் கேத்ராவில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி நுழைவாயில் கேட் மற்றும் பூம்பேரியர் கேட் ஆகியவற்றை இயக்கி வைத்த காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே. சண்முகம் துவக்கி திறந்து வைத்தார்.
காஞ்சிபுரம் நத்தப்பேட்டையில் உள்ள செரின் கேத்ரா நகரில் சுமார் 171க்கும் மேற்பட்ட முதியோர்கள் வசித்து வருகின்றனர். தங்களின் ஓய்வு காலத்தை அமைதியாக கழித்திட நகரப் பகுதியில் இருந்து சற்று விலகி அமைதியான சூழலில் ஷெரின் கேத்ரா நகரில் வீடுகளை கட்டி வசித்து வருகின்றனர்.
இந்த ஷெரின் கேத்ரா நகரில் வீடுகளை கட்டித் தந்த வெளிநாட்டு நிறுவனம் வாக்குறுதி கொடுத்தது போன்று எந்த ஒரு வசதியும் பாதுகாப்பு வசதியும் செய்து தரவில்லை என்று கூறப்படுகிறது. எனவே ஷெரின் கேத்ராவில் வசிக்கும் தங்களை பாதுகாத்துக் கொள்ள ஷெரின் கேத்ரா ஓனர்ஸ் அசோசியேஷன் என்ற அமைப்பினை ஏற்படுத்தி தங்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகளை தாங்களே செய்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில் 8.21 இலட்சம் மதிப்பீட்டில் தானியங்கி கேட் மற்றும் தானியங்கி பூம்பேரியர் கேட் ஆகியவற்றை அமைத்துள்ளனர். இந்த தானிய கேட் மூலம் நாருக்குள் வந்து செல்வோர் யார் என்பதை மடிக்கணினி மூலம் கண்காணித்தும் வருகின்றனர்.
இதன் திறப்பு விழாவுக்கு வருகை தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே. சண்முகம் அவர்களிடம் நகரில் வசிக்கும் முதியோர்கள் சார்பில், தினசரி காவல்துறையினர் நாருக்குள் வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே. சண்முகம் அப்பகுதி காவல் ஆய்வாளரிடம் ஷெரின்கேத்ரா நகரில் காவல்துறையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபட உத்தரவு பிறப்பித்தார்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஷெரின் கேத்ரா ஓனர்ஸ் அசோசியேஷன் சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் திருமலை ஸ்ரீதர், இணைச்செயலாளர் என். சுப்பிரமணியன், பொருளாளர் சிடி ரவிசங்கர் மற்றும் சங்க உறுப்பினர்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தார்கள்.
செய்தியாளர் : திணேஷ்
கருத்துகள் இல்லை