• சற்று முன்

    அரியூர் தங்க கோயிலில் 10,008 நெய் தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு: ஸ்ரீ சக்தி அம்மா பங்கேற்பு!



    வேலூர் மாவட்டம், வேலூர் அடுத்த அரியூர் தங்க கோயிலில் 10,008 நெய் தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடந்தது .ஸ்ரீ சக்தி அம்மா பங்கேற்று பூஜைகளை  முன்னின்று நடத்தி வைத்தார்.

    வேலூர் அரியூர் ஸ்ரீ நாராயணி பீடத்தில் 10,008 நெய் தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடந்தது. ஸ்ரீ நாராயணி பீடத்தின் நிறுவனர் ஸ்ரீ சக்தி அம்மா கலந்துகொண்டு பூஜைகள் மற்றும் சிறப்பு ஆராதனைகளை முன் நின்று நடத்தினார். இதைத்தொடர்ந்து ஸ்ரீ சக்தி அம்மாவிற்கு பாத பூஜை செய்து பக்தர்கள் வழிபாடு செய்தனர். இந்த 10,008 நெய் தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு வெகுவிமரிசையாக நடந்தது. உலக நன்மைக்காகவும், இயற்கை வளங்களை பாதுகாக்கவும் இந்த சிறப்பு வழிபாடு நடந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சிறப்பு வழிபாட்டில் உள்ளூர் பக்தர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் மற்றும் வெளி மாநில பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு ஸ்ரீ நாராயணியை வழிபட்டு ஸ்ரீ சக்தி அம்மாவிடம் ஆசியையும் பெற்றுச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டது.

    செய்தியாளர் : வாசுதேவன்


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad