வேலூர் மாவட்ட ஆட்சியர் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாள் முன்னிட்டு அரசு அலுவலர்கள் தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி ஏற்பு!
வேலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் முன்னாள் படை வீரர்கள் டிஜிட்டல் முறையில் வாழ்நாள் அடையாள சான்று வழங்கும் விழா
வேலூர் மாவட்டம், வேலூர், முன்னாள் படை வீரர்கள் நல அலுவலகம், முன்னாள்படை வீரர்களுக்கான வாழ்நாள்
அடையாளச் சான்றிதழை டிஜிட்டல் முறையில் பெறுவதற்கான முகாமை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தொடங்கி வைத்து, முன்னாள் படை வீரர்களுக்கான வாழ்நாள் அடையாளச் சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சென்னை துணை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் திலிப்குமார். ஐ.டி. ஏ.எஸ்., வேலூர் வருவாய் கோட்டாட்சியர் வெ. பாலசுப்பிரமணியன், துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட ஆட்சியர் தலைமையில் சுதந்திர இந்தியாவின் சிற்பி சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாள் முன்னிட்டு அரசு அலுவலர்கள் தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி ஏற்பு!
வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சுதந்திர இந்தியாவின் சிற்பி சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்த தினமான அக்-31ம் நாளை முன்னிட்டு வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமையில் தேசிய ஒருமைப்பாடு நாள் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வின் போது ஆட்சியர் அலுவலக அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
செய்தியாளர் : வாசுதேவன்
கருத்துகள் இல்லை