கேதார கௌரி விரதத்தையொட்டி உலக புகழ்பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய குவிந்து வரும் பக்தர்கள் கூட்டம்
உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி பல்வேறு மாநில,மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சாமி தரிசனம் செய்திட பக்தர்கள் குவிந்து வருகின்றனர்
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் அமாவாசை தினமான இன்று கேதார கௌரி விரதம் எதிர் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது
தீபாவளி பண்டிகையை ஒட்டி தொடர் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கும், பிரசித்தி பெற்ற கோவில்களுக்கும் சென்று வருகின்றனர்.
அந்த வகையில் சக்தி பீடங்களில் ஒன்றான உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் தொடர் விடுமுறை கேதார கௌரி விரதத்தை ஒட்டி உள்ளூர் வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான மக்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் குவிந்து உள்ளனர்.
சாமி தரிசனம் செய்ய வருகை தந்துள்ள பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ள நிலையில், கீயூ வரிசையில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
செய்தியாளர் : தினேஷ்
கருத்துகள் இல்லை