• சற்று முன்

    பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டுமென போலீசார் பொதுமக்களுக்கு கொட்டும் மழையில் அறிவுரை*

    ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் போது அதிக அளவில் சூறைக்காற்று மற்றும் கனமழை பெய்யக்கூடுவதால் பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டுமென போலீசார் பொதுமக்களுக்கு கொட்டும் மழையில் அறிவுரை*


    தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று மதியம் ஃபெஞ்சல் புயலாக நிலவிக் கொண்டிருந்தது இந்த புயலானது புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கு சுமார் 270 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது இது 10 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புதுச்சேரி கடற்கரை அருகே  இன்று மதியம் கரையை கடக்கும் என இந்தியா வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது..


    அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டு தற்போது ரெட் அலர்டாக உருமாறி அதீதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில்  இருந்து பேருந்து மூலமாக பயணம் மேற்கொள்ளும் பொதுமக்கள் தங்களுடைய பாதுகாப்புகளை உறுதி செய்யும் விதமாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி உத்தரவின் பேரில் வாலாஜாபேட்டை நகர காவல் ஆய்வாளர் சாலமன்ராஜா தலைமையிலான போலீசார் பேருந்து நிலையத்தில் இருந்த பொதுமக்களை நேரடியாக சென்று தற்போது ஃபெஞ்சல் புயல் கரையை இன்று மாலை கரையை கடக்கும் என்பதால் அதிக குளிர்ச்சியான சூறைக்காற்று பலமாக வீசப்படுவதாகவும் அதேபோல் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக யாரும் அதிகளவில் வெளியே செல்வதை தவிர்த்து வீட்டிலேயே இருக்க வேண்டுமென பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்..

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad