• சற்று முன்

    வளர்ந்து நிற்கும் புளிய மரத்தால் அச்சத்தில் வாழும் குடியிருப்பு வாசிகள் பலமுறை மனு கொடுத்தும் கண்டுகொள்ளாத அதிகாரிகள்

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் செதுக்கரை பகுதியில் சுமார் 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன இந்தப் பகுதியில் குடியிருப்பு வீட்டை ஒட்டி புளிய மரங்கள் வளர்ந்து நிற்கின்றனஇதனைத் தொடர்ந்து அந்த புளிய மரத்தின் அடியில் சிதலமடைந்து வருவதால் அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றன அது மட்டும் இன்றி அந்தப் பகுதியில் குழந்தைகள் முதியவர்கள் என ஏராளமானவர் இருப்பதால் தற்போது தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகின்றன இதனால்  புளிய மரம்  பலத்த காற்று அடிக்கும் போது வேரோடு ஆடுவதால் அச்சமடைந்து வருகின்றன இது மட்டும் இன்றி இந்த புளிய மரத்தில் ஏற்பட்டுள்ள ஓட்டைகளில் விஷசந்துகள் ஒளிந்து கொண்டு அவ்வப்போது வெளியே வருவதால் மிகவும் அச்சம் அடைந்து வருகின்றன இந்த புளிய மரம் வீட்டின் அருகாமையில் வளர்ந்து வருவதால் வீட்டின் சுவர் சேதம் அடைந்து வருவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர் 


    அதனை அகற்ற வேண்டுமென சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் மாவட்ட ஆட்சியரிடமும் பலமுறை மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் சில சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை அகற்ற அலட்சியம் காட்டி வருவதாகவும் தமிழக முதல்வர் நல்லாட்சியில் இது போன்ற அலட்சியம் காட்டி வரும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளின் இந்த அலட்சிய போக்கால் நல்லாட்சிக்கு களங்கம் ஏற்படுத்தி வருவதாகவும் அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர் அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன் குடியிருப்பு பகுதியை உள்ள இந்த புளிய மரத்தை அகற்ற வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.குடியிருப்பு வாசிகளை அச்சுறுத்தி வரும்   புளிய மரத்தால் தொடர்ந்து அச்சத்தில் பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 

    மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் 

    செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad