கரூரில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் 53 வது ஆண்டு துவக்க விழா
கரூரில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் 53 வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு முன்னாள் அமைச்சர்கள் சின்னச்சாமி மற்றும் எம் ஆர் விஜயபாஸ்கர் ஆகியோர் பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மாஆகியோர் முழு உருவ சிலைக்கு மலர் தூவி மரியாதைசெலுத்தினர் தொடர்ந்து இனிப்புகள் வழங்கினார்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் 53 வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா,புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் சிலைக்கு கழக அமைப்புச் செயலாளர் சின்னச்சாமி,முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட செயலாளர் ஆன எம் ஆர் விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தினர் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் அதிமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்
செய்தியாளர் :விக்னேஷ்
கருத்துகள் இல்லை