• சற்று முன்

    கல்குவாரி அமைப்பது குறித்து பொதுமக்களின் கருத்துக்கள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் மாவட்ட வருவாய் அலுவலர் உறுதி

    தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள தென்கரைகோட்டை கோபிசெட்டிபாளையம் பகுதிகளில் அமைய உள்ள  கல்குவாரிக்கு  பொதுமக்கள் அளித்த  கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என தருமபுரி மாவட்ட வருவாய் அலுவலர் பால்பிரின்ஸி ராஜ்குமார்  தெரிவித்தார் 

    தருமபுரி மாவட்ட மாசுகட்டுபாட்டு வாரியம் சார்பில் தென்கரைகோட்டை கோபிசெட்டிபாளையத்தில் புதியதாக  கல்குவாரி அமைக்க பொதுமக்களின் கருத்துகேட்பு கூட்டம் சுற்றுச்சூழல் பொறியாளர் நித்தியலட்சுமி தலைமையில் இராமியனஹள்ளியில் நடைபெற்றது 

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பால்பிரின்ஸி ராஜ்குமார் பேசுகையில் பொதுமக்கள பாதிக்காத வகையில் அரசு முடிவெடுக்கும்  என்றும்  தொழிற்சாலைகளில் கிருஷ்ணகிரி மாவட்டம்  

    தருமபுரி மாவட்டத்தை விட.முன்னேறி உள்ளது  என்றும்  சிப்காட்டால் நிறைய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்தது எனவே  விவசாயத்திற்கும் கொடுக்கும் முக்கியத்துவம்  தொழிற் வளர்ச்சிக்கும்  கொடுக்க வேண்டும்  இளைஞர்கள் அந்த திட்டங்களை பயன்படுத்தி கொள்ளவேண்டும்  கொடுக்கபடுகிறது தொழில் 

    வளர்ச்சியால் மட்டுமே விவசாயம் பெருகும்  பொதுமக்களின் கருத்துக்கள் அவர்கள்  அளித்த மனுக்கள் அரசின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர்  பால்பிரின்ஸிராஜ்குமார் தெரிவித்தார்  இந்நிகழ்ச்சியில்  மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கரிகால்பாரிசங்கர் கலந்து கொண்டார்





    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad