• சற்று முன்

    வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த நாகை நாடாளுமன்ற உறுப்பினர் கோட்டூர் ஒன்றியம் முழுவதும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு



    நடைபெற்று முடிந்த நாகை நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ் இன்று திருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கோட்டூர் ஒன்றிய பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார் கோட்டூர்  கடை வீதியில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் செல்வராஜ்க்கு மாலை அணிவித்து ஆரத்தி எடுத்து வரவேற்பளித்தனர் இந்நிகழ்வில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி
     ஏ கேஎஸ் விஜயன் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சிவபுண்ணியம் உலகநாதன் திமுக

    ஒன்றிய செயலாளர் பாலஞானவேல் இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன் ஒன்றிய பெருந்தலைவர் மணிமேகலை முருகேசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    செய்தியாளர் : இளவரசன் 


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad