பேர்ணாம்பட்டு அருகே கடத்தப்பட்ட 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே பத்திரப்பல்லி சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வேன் கர்நாடக பதிவு எண் கொண்டதாக இருந்தது. அதில் ராணிப்பேட்டை மாவட்டத்திலிருந்து ரேஷன் அரிசியை கடத்திக் கொண்டு கர்நாடக மாநிலம், கேஜிஎஃப்-க்கு கொண்டு செல்வது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து இந்த வேனில் ரேஷன் அரிசியை கடத்திச் சென்ற குற்றத்திற்காக அந்த வேனை ஓட்டி வந்த ஓட்டுநர் வருண்( 21), சரண் (21 ),விஜய் (21) ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்து மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட 4 டன் ரேஷன் அரிசியை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர் போலீசார்.
செய்தியாளர் : வாசுதேவன்
கருத்துகள் இல்லை