காஞ்சிபுரம் அருகே நெடுஞ்சாலையில் கார் ஓட்டி வந்தவருக்கு திடீர் மயங்கி உயிரிழப்பு
காஞ்சிபுரம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து வேலூர் நோக்கி கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்துள்ளது.
காஞ்சிபுரம், பொன்னேரி கரை மேம்பாலம் அருகில் வந்த பொழுது கார் தாறுமாறாக ஓடி சைக்கிளில் சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவர் மான்மகிழன் மற்றும் சாலையில் நடந்து கொண்டிருந்த பெண்மணி அம்மு ஆகியோர் மீது மோதி விபத்து ஏற்படுத்தி விட்டு சாலையின் ஓரத்தில் மோதி நின்றது. அருகில் இருந்தவர்கள் விபத்து ஏற்படுத்திய காரை திறந்து பார்த்தபோது காரை ஒட்டி வந்த அடையாளம் தெரியாத நபர் மயங்கி கிடந்தார்.சம்பவம் குறித்து பொன்னேரி கரை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து பொன்னேரி கரை காவல் நிலைய போலீசார் சம்பவஇடத்திற்கு வந்து விபத்தில் காயமடைந்தவர்களையும், காரில் மயங்கி கிடந்த வரையும் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். காரில் மயங்கி கிடந்தவருக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் சோதனை மேற்கொண்ட பொழுது அவர் ஏற்கனவே உயிரிழந்து போனது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து
அவரிடமிருந்து ஆதாரங்களை சேகரித்து பார்த்த பொழுது சென்னை பெரம்பூரைச் சேர்ந்த ராஜ்குமார் வயது 52 என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார காஞ்சிபுரம் அருகே நெடுஞ்சாலையில் கார் ஓட்டி வந்தவருக்கு திடீர் வலிப்பு ஏற்பட்டு மயங்கி உயிரிழப்பு. அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் : தினேஷ்
கருத்துகள் இல்லை