வைகாசி விசாகத்தில் பக்தர்களுக்கு இலவசமாக நீர் மோர் வழங்கல்!
வைகாசி விசாகத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த லத்தேரி பட்டியூரில் மாநில நெடுஞ்சாலை ஓரத்தில் பந்தல் அமைத்து அந்த வழியாகச் செல்லும் வழிப்போக்கர்கள், இருசக்கர வாகனத்தில் செல்வோர், பேருந்துகளில் செல்வோர் என்று அனைவருக்கும் இலவசமாக அன்னங்குடி பெருமாள் கோயில் நிர்வாகம் சார்பில் நிர்வாகிகள் இலவசமாக ஐஸ் மோர் மற்றும் பானகம் ஆகியவற்றை தொடர்ந்து காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இடைவிடாது விநியோகம் செய்தனர். இதனை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வாங்கி பருகி விட்டு அவர்களை வாழ்த்திச் சென்றது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் : வாசு தேவன்
கருத்துகள் இல்லை