Header Ads

  • சற்று முன்

    பருத்தி மற்றும் எள் பயிர் விவசாயிகள் வேளாண்துறை அதிகாரிகளிடம் நிவாரணம் பெற்று தர வலியுறுத்தல்

    மாவட்ட ஆட்சியர் உத்தரவை அடுத்து மழையில் பாதிக்கப்பட்ட பருத்தி மற்றும் எள் பயிர்களை கணக்கெடுக்கும் பணி துவங்கியது. வேளாண்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் நிவாரணம் பெற்று தர வலியுறுத்தல்

    திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 40,000 ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி பணிகளும் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் எள் பயிற் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கோடை மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக பருத்தி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது பூக்கள் மற்றும் பருத்திக் காய்கள் கொட்டி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் செலவு செய்து பருத்தி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாவும், மேலும் எள் பயிர்கள் மழையில் சாய்ந்து மழை நீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டுதாவும் மாவட்ட நிர்வாகம் உரிய கணக்கெடுப்பு நடத்தி தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்

    அந்த வகையில் நேற்று திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சாருஸ்ரீ பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு கணக்கெடுக்க வேண்டும் என உத்தரவிட்டதை அடுத்து இன்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம்  குன்னியூர், கண்டமங்களம், ரெகுநாதபுரம் ஆகிய பகுதிகளில் வேளாண்துறை உதவி இயக்குனர் தங்கப்பாண்டியன் வேளாண் துறை அதிகாரி பிரித்விராஜ் துணை வேளாண்மை அலுவலர் சங்கர் மற்றும் வேளாண் துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர் 

    அப்போது வேளாண் துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் தொடர்ந்துபெய்த மழையின் காரணமாக பயிர்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டு விட்டது தமிழக அரசுக்கு எடுத்துக் கூறி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.அப்போது அந்த வழியாக வந்த திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் கணக்கெடுக்கும் பணி நடைபெறுவதை பார்த்து அங்கு வந்து அதிகாரிகளிடம் பயிர் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    செய்தியாளர் : இளவரசன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad