Header Ads

  • சற்று முன்

    ரூ.1,99,997ஐ கிரிடிட் கார்டு மூலம் அபேஸ் செய்ததை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த வேலூர் சைபர் கிரைம் போலீஸார்!

    வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் ராஜா என்பவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு போனில் வந்த தெரியாத நபர் ஆக்சிஸ் வங்கி வாடிக்கையாளர்கள் மையம்-மும்பையிலிருந்து பேசுவதாகவும் உங்களுடைய ஆக்சிஸ் வங்கி கிரிடிட் கார்டில் ரிவார்டு புள்ளிகள் நிறைய இருப்பதாகவும் அந்த ரிவார்டு புள்ளிகள் பெறுவதற்கு அவர் கூறிய லிங்க்கை கூகுள் மூலம் டைப் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். பாதிக்கப்பட்டவர் தனக்கு வந்த லிங்க்கின் உள்ளே சென்றவுடன் பாதிக்கப்பட்ட நபரின் கிரிடிட் கார்டு எண், சிவிவி, மற்றும் ஓடிபி ஆகியவற்றை பதிவிட வைத்து இவருடைய கிரிடிட் கார்டிலிருந்து சுமார் ரூ.1,99,997/- பணத்திற்கு பர்சேஸ் செய்யப்பட்டுள்ள தகவல் தெரிந்து பாதிக்கப்பட்டவர் தன்னுடைய கிரிடிட் கார்டு மூலம் இழந்த பணம் சம்மந்தமாக சைபர் கிரைம் 1930 வில் புகார் செய்து வேலூர் சைபர் கிரைம் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் என்.மணிவண்ணன்  முன்னிலையில் பாதிக்கப்பட்ட நபரின் இழந்த பணம் ரூ.1,99,997/- மீட்டு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ந.கோட்டீஸ்வரன், காவல் ஆய்வாளர் கி.புனிதா, காவல் உதவி ஆய்வாளர் யுவராணி (டெக்னிகல்), பெண் தலைமை காவலர் சசிகலா, காவலர் சஞ்சய்குமார் ஆகியோர் உடனிருந்தனர். இவ்வாறு வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக பத்திரிகை செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


    செய்தியாளர் : வாசு தேவன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad