வேலூரில் ஸ்ரீ சாலை கெங்கையம்மன் கோயில் தேர்த் திருவிழா கோலாகலம்!
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சாலை கெங்கை அம்மன் கோயில் திருவிழாவில் நடைபெறும் மிக முக்கிய திருவிழாவான தேர்த் திருவிழா நடந்தது. இந்த தேர்த் திருவிழாவில் வேலூர் தொகுதி எம்எல்ஏ கார்த்திகேயன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். கோயில் நிர்வாகத்தின் சார்பில் அவருக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன் கோயில் நிர்வாகிகளும், கட்சி பிரமுகர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தேர்த் திருவிழாவை சிறப்பித்தனர்.
செய்தியாளர் : வாசுதேவன்
கருத்துகள் இல்லை