• சற்று முன்

    மின்சார வசதியின்றி செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தில் படித்து 500க்கு 492 எடுத்த அரசு பள்ளி மாணவி.இலவச மின் இணைப்பு கொடுத்த அதிகாரிகள்

    திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி பத்தூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்த பாலா சுதா தம்பதியினரின் மகள் துர்க்கா தேவி.பாலா மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார் சுதா இல்லத்தரசியாக உள்ளார்.துர்கா தேவி கொரடாச்சேரி அரசு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவில் துர்கா தேவி 500க்கு 492 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியளவில் முதலிடத்தையும் மாவட்ட அளவில் இரண்டாம் இடத்தையும் பிடித்திருந்தார. இது குறித்து அவர் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கடந்த இரண்டு வருடமாக தனது வீட்டில் மின்சார வசதி இல்லாத நிலையில் செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தில் படித்து இந்த மதிப்பெண்ணை பெற்றதாக அவர் தெரிவித்திருந்தார்.

    இதனையடுத்து இந்த செய்தி ஊடகங்களில் வெளியானது. தொடர்ந்து திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் திருவாரூர் மின்வாரிய அதிகாரிகள் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து மாணவியின் வீட்டிற்கு மூன்று மின் கம்பங்களை நட்டு இலவச மின் இணைப்பை அளித்துள்ளனர்.தனது வீட்டில் கடந்த இரண்டு வருடமாக மின்சார வசதி இல்லாத காரணத்தினால் செல்போன் டார்ச் விளக்கு மற்றும் மெழுகுவர்த்தி துணையுடன் தான் படித்து 500க்கு 492 மதிப்பெண்கள் எடுத்ததாக மாணவி துர்கா தேவி செய்தி ஊடகங்களில் கூறி இருந்தார்.

    இதன் காரணமாக திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் உள்ளிட்ட மின்வாரிய அதிகாரிகள் நேரில் மாணவியின் வீட்டை ஆய்வு செய்து இலவசமாக மூன்று மின் கம்பங்களை அமைத்து இரண்டு மின் விளக்குகள் மற்றும் மின் விசிறியுடன் கூடிய மின் இணைப்பினை மாணவியின் வீட்டிற்கு அளித்துள்ளனர்.இது குறித்து மாணவி கூறுகையில் நான் செல்போன் டார்ச் லைட் விளக்கில் படித்து 500 க்கு 492 மதிப்பெண்கள் எடுத்துள்ளேன்.தற்போது எனது வீட்டிற்கு இலவச மின் இணைப்பு கொடுத்துள்ளனர்.இதன் காரணமாக 12-ம் வகுப்பில் சிறப்பாக படித்து மாநில அளவில் அதிக மதிப்பெண்களை பெறுவேன் என்றும் தனது லட்சியமான டாக்டர் கனவை எட்டுவேன் என்றும் தெரிவித்தார்.

    செய்தியாளர் :இளவரசன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad