வேலூர் பொய்கை மாட்டுச்சந்தையில் ரூ. 80 லட்சத்திற்கு வர்த்தகம்!
வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தை வாரம்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் கால்நடைகள் விற்பனைக்கு அதிகளவில் கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில் 21ஆம் தேதி மட்டும் ஒரே நாளில் ரூ. 80 லட்சத்திற்கும் அதிகமாக வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நேற்று வழக்கத்தை விட வியாபாரிகள் கூட்டம் சற்றே அதிகமாக காணப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை