மதுரையில் முகப்பு விளக்குகள் பழுதாகி அபாயகாரமான நிலையில் சாலையில் பயணிக்கும் மாநகர் பேருந்து
மதுரை மாநகரில் இயக்கப்படும் பேருந்துகள் பெரும்பாலும் முறையான பராமரிப்பு இன்றி காணப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தவண்ணம் உள்ளது.
அந்த வகையில் மதுரை மாட்டுத்தாவணி - மாடக்குளம் செல்லும் மாநகர பேருந்து( TN58N2063) ஒன்றில் இருக்கைகள் பழுதாகி துருப்பிடித்த நிலையில் கடுமையாக சேதமடைந்து குப்பை ஏற்றி செல்லும் லாரியை விட மிகவும் மோசமான அபாயகரமான முறையில் காணப்படுகிறது.
மேலும் பேருந்தின் முகப்பு விளக்குகளும் எரியாமல் இரவு நேரங்களில் சாலைகளில் பயணிப்பது சவாலாக உள்ளதனால் பேருந்தில் பயணம் செய்யவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.
குறிப்பாக எக்ஸ்பிரஸ் பேருந்துக்கான கட்டணம் வசூலிக்கப்படும் இந்த பேருந்தில் முறையான பராமரிப்பு என்பது இல்லாமல் பேருந்து முழுவதும் குப்பைகளாக நிரம்பியும் காணப்படுகிறது. இதுகுறித்து திருப்பரங்குன்றம் பணிமனை நிர்வாகமும், மாநகர போக்குவரத்து நிர்வாகமும் உரிய. முறையில் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம்
கருத்துகள் இல்லை