Header Ads

  • சற்று முன்

    கள்ளச் சந்தை மதுபானத்தை தடை செய்ய அரசு மதுபானக் கடை திறக்க கிராம மக்கள் கோரிக்கை!

    கடை இல்லாததால் வெளிச்சந்தையில் மதுபானம் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. அரசு கடைக்கு செல்ல வேண்டும் என்றால் 18 கிலோமீட்டர்  செல்ல வேண்டும் கள்ளச் சந்தை மதுபானத்தை தடை செய்ய அரசு மதுபானக் கடை திறக்க கிராம மக்கள் கோரிக்கை!

    கள்ளச் சந்தை மதுபானத்தை தடை செய்ய அரசு மதுபானக் கடை திறக்க கிராம மக்கள் கோரிக்கை! ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வட்டம், முள்ளுவாடி கிராம பகுதியில் வசிக்கும் பொதுமக்கள்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திமுக நிர்வாகி எஸ். ஆறுமுகம் தலைமையில் முள்ளுவாடி கிராமத்தில் அரசு டாஸ்மார்க் கடை திறக்க வேண்டி மனு ஒன்றை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர். இதில் திமுக கூட்டுறவு தலைவர் ரவி, திமுக கிளை செயலாளர்கள்  உள்ளிட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது, ஏற்கனவே முள்ளுவாடி கிராமத்தில் அரசு மதுபானக் கடை இயங்கி வந்த நிலையில் தற்போது கடை இல்லாததால் இந்தப் பகுதியில் நாள் முழுவதும் கள்ளச் சந்தையில் மதுபானம் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. 

    மேலும் முள்ளுவாடி கிராமத்திலிருந்து அரசு மதுபானக் கடைக்கு செல்ல 18 கிலோமீட்டர் தொலைவில் மற்றொரு கடை உள்ளது இதனால் கூலித் தொழில் செய்பவர்கள், விவசாயத் தொழிலாளர்கள் பெரிதும் பாதிப்பு அடைகின்றனர். ஆகையால் அரசு மதுபானக் கடை திறந்தால் கள்ள சந்தையில் மது விற்கப்படுவது தடுக்கப்படும். மேலும் அரசு நிர்ணயித்த விலையில் மதுபானம் கிடைக்கும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.


    ஒருங்கிணைந்த மண்டல செய்தியாளர் ஆர்.ஜே .சுரேஷ் குமார் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad