Header Ads

  • சற்று முன்

    மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 60 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்களை அனுப்ப தயார் நிலையில் உள்ள திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம்


    சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் காரணமாக கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 60 லட்சம் மதிப்புள்ள தேங்காய்,பிஸ்கட், அரிசி, ரவை, கோதுமை, கேக், தண்ணீர், உள்ளிட்ட உணவு பொருட்கள், காய்கறிகள் மருந்துகள், பெண்களுக்கு தேவையான பொருட்கள்  உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை  இரண்டு லாரிகள் மூலம் சென்னை மாநகராட்சிக்கு அனுப்ப தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்  தலைமையில் நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.  இரண்டு லாரிகள் அளவிற்கு பொருட்கள் சேர்ந்தவுடன் அதை சென்னை மாநகராட்சிக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி மற்றும்  திட்ட அலுவலர் செல்வராசு மற்றும் வட்டாட்சியர் சிவப்பிரகாசம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள், அரசு அதிகாரிகள், தன்னார்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர்‌: ந.வெங்கட்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad