Header Ads

  • சற்று முன்

    கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தீபத்திருவிழாவிற்கான கொடியேற்றம் சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்றது



    தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாதவந்தோறும்  திருவிழாக்கள் நடைபெறும். இவற்றில் முக்கிய திருவிழாவான கார்த்திகை தீபத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 26 ஆம் தேதி கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி  திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள மோட்ச மண்டபத்தூணில் ஐந்துஅரை அடி உயரம் உள்ள செப்பு  கொப்பரையில் சிவாச்சாரர்களால் கார்த்திகை தீபம் தயார் செய்யப்பட்டு மாலை 6 மணி அளவில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும்.

    இன்று காலை உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு ஆதாரதனைகள் நடைபெறும் .பின்னர் கம்பத்தடி மண்டபத்தில் உள்ள தங்க மூலம் பூசப்பட்ட கொடிமரத்தில் கார்த்திகை தீப திருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெற்றது.

    செய்தியாளர் வி காளமேகம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad