Header Ads

  • சற்று முன்

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே - மக்கள் களம் நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் கனி மொழி பேச்சு...


    கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் நிலவும் குடிநீர் பிரச்சினைகளை விரைவில் சரி செய்து தரப்படும் - மக்கள் களம் நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் கனி மொழி பேச்சு...



    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி புதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட காடல்குடி, சின்னூர், ஜெகவீரபுரம், கந்தசாமிபுரம் மற்றும் மாதலாபுரம் ஆகிய கிராமங்களில் மக்கள் களம் நிகழ்ச்சி நநடைபெற்றது.. மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தலைமையில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோர் முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி  கலந்து கொண்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். 

    மேலும், 13 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா, மகளிர் திட்டம் மூலம் 50 பயனாளிகளுக்கு ரூ.9.30 லட்சம் குழு கடன், 15 பேருக்கு வேளாண், தோட்டக்கலைத் துறை சார்பில் இடுபொருட்கள், விதைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். 

    அப்போது அவர் பேசுகையில் கிராமங்களில் நிலவும் குடிநீர் பிரச்சினைகளை விரைவில் சரி செய்து தரப்படும். சாலைகளை மேம்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது. மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப் பெறாதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக அவர்களது மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி தகுதி உள்ளவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

    நிகழ்ச்சிகளில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஒன்றிய திமுக செயலாளர்கள் செல்வராஜ், அன்புராஜ், ராதாகிருஷ்ணன், கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டிபாய், வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad