வேலூரில் விதிமுறையை மீறும் தனியார் பேருந்துகளின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்ய பொதுமக்கள் கோரிக்கை
பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அவதி
வேலூர் மாவட்டம், பாகாயத்திலிருந்து காட்பாடி வழியாக வள்ளிமலை சாலை வரை பல தனியார் நகரப் பேருந்துகள் இயங்கி வருகின்றன. கடந்த சில மாதங்களாக மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை அனைத்து தனியார் பேருந்துகளும் காட்பாடி ரயில் நிலைய பேருந்து நிலையத்திலேயே திரும்பி விடுகின்றன வள்ளிமலை கூட்ரோடு வரை பேருந்தில் பயணிக்க டிக்கெட்க்கான பணத்தைப் பெற்றுக்கொண்டு இரண்டு பேருந்து நிறுத்தத்திற்கு முன்பாகவே காட்பாடி ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் பொதுமக்களை பயணிகளை இறக்கி விட்டு அவதிக்குள்ளாக்கி பேருந்துகள் திரும்பி செல்கின்றனர். இதனால் முதியவர்கள் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பணிக்கு செல்வோர் நடந்தே செல்லும் செல்லம் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஷேர் ஆட்டோவில் பயணித்தால் ரூ.20 கொடுக்க வேண்டிய சூழ்நிலை இதனை கேட்கும் பயணிகளை தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆபாசமாக பேசி தாக்க முற்படுவதாக தகவல், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் அனைத்து பேருந்துகளும் உள்ளே சென்று நிறுத்தாமல் மெயின் ரோட்டிலே நிறுத்துவது வழக்கமாக கொண்டுள்ளனர் அதனால் போக்குவரத்து நெறிச்சல் அதிகமாக காணப்படுகிறது அதேபோல் சில தணியார் பேருந்துக்கள் காந்தி நகர் உள்ளே செல்வது இல்லை நேரம் ஆகிவிட்டது காந்தி நகர் செல்லாது என பயணிகளை இறக்கி விட்டு செல்கின்றனர். அங்கு ஒரு தணியார் காலேஜ் உள்ளது படிக்கும் மாணவிகள் நடந்தே ஒடபிள்ளையார் கோயில் வரை நடந்து வரும் அவலமும் உள்ளது. போக்குவரத்து துறையினர்கள் போக்குவரத்து உரிமம் பெற்று விதிமுறைகளை மீறும் தனியார் பேருந்துகளின் உரிமங்களை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட துறை ஊழியர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் உரிய சட்ட ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சமூக ஆர்வலர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்
சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்...
கருத்துகள் இல்லை