• சற்று முன்

    ஜெகத்ரட்சகன் எம்.பி தொடர்புடைய இடங்களில் ரூ.32 கோடி ரொக்கம், ரூ.28 கோடி தங்கம் பறிமுதல்: வருமான வரித் துறை தகவல்



    முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்பியுமான ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் நடத்த சோதனையில் ரூ.400 கோடி மதிப்பிலான கணக்கில் வராத கட்டண ரசீதுகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

    வருமான வரித் துறை இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 100 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் கல்வி நிறுவனங்களில் வரி ஏய்ப்பு புகார்கள் கண்டறியப்பட்டுள்ளன. 

    கல்லூரிகளில் இருந்து ரூ.400 கோடி மதிப்பிலான கணக்கில் வராத கட்டண ரசீதுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதேபோல், தவறான தகவல்கள் அளித்து ரூ.25 கோடி ஸ்காலர்ஷிப் வழங்கப்பட்டதற்கான ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

    இன்னொரு தேடுதலில் கல்வி நிறுவனங்களில் பயில மாணவர்களை ஈர்ப்பதற்காக ஏஜென்டுகள் பயன்படுத்தப்பட்டதும், இதற்காக கணக்கில் காட்டப்படாத கமிஷன் தொகை சுமார் ரூ.25 கோடி வசூல் செய்யப்பட்டதும் கண்டுபிக்கப்பட்டுள்ளன. மதுபான வணிகத்தில் போலி வரவு செலவு மூலம் ரூ.500 கோடி முறைகேடு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

    மேலும், கணக்கில் காட்டாத ரூ.300 கோடி, அறக்கட்டளைக வங்கி கணக்கில் இருந்து தனிப்பட்ட கணக்குகளுக்கு மாற்றம் செய்யப்பட்டதற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு தொழில் நிறுவனத்தை கையகப்படுத்துவதற்காக செலுத்தப்பட்ட பணமும் இதில் அடங்கும். இதுவரை நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.32 கோடி ரொக்கமும். ரூ.28 கோடி மதிப்புள்ள தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளன" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சோதனை பின்னணி: அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி.யும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான ஜெகத்ரட்சகன் தனக்கு சொந்தமான கல்வி, தொழில் நிறுவனங்கள் மூலம் ஈட்டிய வருவாயை முறையாக கணக்கு காட்டாமல், வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. 

    இதையடுத்து, வருமானவரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்கள், மகள், மருமகள், உறவினர்கள் தொடர்புடைய இடங்கள் என சுமார் 50 இடங்களில் கடந்த 5-ம் தேதி முதல் அடுத்தடுத்து சோதனை நடத்தினர். கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், அலுவலகங்கள், மதுபான ஆலைகள், வீடுகள், நட்சத்திர விடுதிகள் என பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


    செய்தியாளர் : ஜே. ஆர். சுரேஷ் குமார் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad