அரக்கோணம் – சோளிங்கர் சாலையில் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் பொதுமக்கள் சாலை மறியல்!!!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கைனூரில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. இதில் பாதி அளவு பணிகள் நிறைவேற்றப்பட்ட நிலையில் சில காரணங்களுக்காக பணிகள் மூன்று மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ரயில்வே சுரங்கப்பாதை முடிக்கப்படாமல் இருப்பதால் 7 கிராமங்களை சேர்ந்த மக்கள் 5 கிலோ மீட்டருக்கு மேல் சுற்றிவர வேண்டி உள்ளது. குறிப்பாக வயதானவர்கள், பெண்கள் , குழந்தைகள் இருசக்கர வாகனம் மற்றும் சைக்கிளிலில் வருவதற்கு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். பள்ளி மாணவர்கள் விரைந்து பள்ளிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது . எனவே ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணியை மீண்டும் தொடங்க வலியுறுத்தி ஊராட்சி மன்ற தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில் கிராம மக்கள் இணைந்து அரக்கோணம் – சோளிங்கர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர் சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்...
கருத்துகள் இல்லை