அரக்கோணத்தில் அரசு பள்ளி மாணவனின் புகார் மனுவை வாங்க மறுத்த நகராட்சி அதிகாரி!!!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் காந்திநகர் பகுதியில் அரசு நகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் அருகாமையில் தொடர்ந்து குப்பை கொட்டுவதால் பள்ளிக்குள் துர்நாற்றம் வீசுவது மட்டுமல்லாமல் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கொசு தொல்லையும் அதிகமாக இருக்கிறது. இதைத்தொடர்ந்து அப்பள்ளியில் பயின்று வரும் ஆறாம் வகுப்பு மாணவன் நகராட்சி ஆணையருக்கு புகார் மனு எழுதி நகராட்சி ஆணையர் ரகுராமிடம் கொடுக்க செல்லும்போது ஆணையர் இல்லாத காரணத்தால், சுகாதார ஆய்வாளர் சுதாகர் மனுவை வாங்கி படித்தார். பின்பு அந்த மாணவனிடம் பேசிய சுகாதார ஆய்வாளர் சுதாகர் அந்த இடத்தில் குப்பைகள் அகற்றப்பட்டு விட்டது என்று கூறினார். அதற்கு அந்த பள்ளி மாணவன் குப்பை கொட்டுவார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். அதற்கு எஸ்.ஐ.சுதாகர் மனுவை கையில் வாங்க முடியாது தபாலில் போடு என்று கூறினார். மேலும் இதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சென்று பள்ளியின் அருகாமையில் குப்பை உள்ளதா என்று பார்க்கும் போது அதிவேகமாக நகராட்சி ஊழியர்கள் குப்பைகளை அகற்றிக் கொண்டிருந்தனர்
சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்.
கருத்துகள் இல்லை