• சற்று முன்

    கோவில்பட்டியில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை கண்டித்து வியாபாரிகள் திடீரென மறியல்- போக்குவரத்து பாதிப்பு.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பசுவந்தனை நெடுஞ்சாலை மற்றும் நகரின் மையப் பகுதிகள் உட்பட பல்வேறு பகுதிகளில்  சாலையோர ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். 


    இந்நிலையில்  பசுவந்தனை சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ரஹமத் தலைமையில் ஜேசிபி இயந்திரங்களுடன் நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர் வணிகர்களுக்கு முன்னறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்படாமல் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் கடையின் முகப்புகளை சேதப்படுத்துவதாகவும் இதனால் வணிகம் பாதிக்கபடுவதாக கூறி  வியாபாரிகள் 50க்கும் மேற்பட்டோர் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் தகவல் அறிந்து அப்பகுதிக்கு விரைந்து வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். முறையாக நோட்டீஸ் கொடுக்கப்பட்டு முன்னறிவிப்பு செய்த பின்னர் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் மறியல் போராட்டத்தை கைவிட்டு  கலைந்து சென்றனர் . இதனால் கோவில்பட்டி பசுவந்தனை நெடுஞ்சாலையில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad