உள்ளாடையுடன் செம ஹாட்டாக ஆட்டம் போட்ட காதல் மன்னன் மகள்..
நடிகை ஸ்ருதிஹாசன் வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு ஆட்டம் போட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த ஆண்டு ஸ்ருதிஹாசனுக்கு சூப்பர் ஆண்டு என்றே சொல்லலாம். ஜனவரி மாதம் வெளியான 2 பெரிய தெலுங்கு படங்களிலும் இவர் தான் ஹீரோயின். மேலும், இந்த ஆண்டு வெளியாக உள்ள பிரபாஸின் சலார் படத்தின் ஷூட்டிங்கையும் சமீபத்தில் முடித்துள்ளார் ஸ்ருதிஹாசன்.
உலகநாயகன் மகள்
உலகநாயகன் என ரசிகர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்தவர்களால் கொண்டாப்படும் நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் ஹே ராம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நிலையில், 7ம் அறிவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிப் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன்.
அப்பா கமலுக்கு போட்டி நடிகர்களாக தொடரும் சிரஞ்சீவி மற்றும் பாலய்யா உள்ளிட்ட சீனியர் நடிகர்களுடன் இந்த ஆண்டு ஸ்ருதிஹாசன் ஜோடி போட்டு நடித்திருந்தது ட்ரோல் செய்யப்பட்டது. வீரசிம்மா ரெட்டி படத்தில் பாலகிருஷ்ணாவுடனும் வால்டர் வீரய்யா படத்தில் சிரஞ்சீவி உடனும் ஜோடி போட்டு நடித்திருந்தார் ஸ்ருதிஹாசன்.
தமிழில் கடைசியாக விஜய்சேதுபதி உடன் ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்த லாபம் திரைப்படம் பெரிதாக கை கொடுக்காத நிலையில், தொடர்ந்து தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ஸ்ருதிஹாசன். கேஜிஎஃப் படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் சலார் படத்தில் ஸ்ருதிஹாசன் தான் ஹீரோயின். சமீபத்தில், அந்த படத்தின் படப்பிடிப்பை தான் முடித்து விட்டதாக அறிவித்திருந்தார்.
கருத்துகள் இல்லை