சோழவந்தான் கடை வீதியில் வாகனங்கள் நிறுத்தத்தால் போக்குவரத்துக்கு நெரிசல் போக்குவரத்து காவலர்கள் சரி செய்வார்களா ?
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சோழவந்தான், கடைவீதியில் அமைந்துள்ளது, ஜெனகை மாரியம்மன் கோயில்.இக் கோயிலுக்கு வருவோரும், கடைகளுக்கு பொருள்கள் வாங்க வருபவர்களும், வாகனங்களை, போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் இல்லாமல் வருபவர்களை பாய்ந்து பிடிக்கும் போலீஸார், போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தும் ஆட்டோக்கள், இரு, நான்கு சக்கர வாகனங்களை அகற்ற ஆர்வம் காட்ட சோழவந்தான் காவல் நிலையத்தினர் வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை