மீண்டும் உயிர் பலிகள் ஏற்படாமல் தடுக்க நடை மேம்பாலம் அமைக்க கோரிக்கை
தாம்பரம்-சானடோரியம் ஜி.எஸ்.டி.சாலையில் ஆபத்தான முறையில் சாலையை கடந்து சென்று சாமிதரிசனம் செய்யும் பக்தர்கள், தமிழக அரசு நடை மேம்பாலம் அமைக்ககோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை அடுத்த தாம்பரம்-சானடோரியம் ஜி.எஸ்.டி. சாலையில் பிரசித்திபெற்ற ஸ்ரீ ராம ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் இருபுறமும் சாலையை ஆபத்தான முறையில் கடந்து சென்று சுவாமி தரிசனம் செய்கின்றனர். இது மட்டும்மின்றி தாம்பரத்தில் இருந்து குரோம்பேட்டை செல்லும் ஜி.எஸ்.டி.சாலையில் பிரபல தேசிய சித்தா மருத்துவமனை, நெஞ்சக மருத்துவமனை, அரசு பொதுமருத்துவமனை மற்றும் தாம்பரம் மாநகராட்சி அலுவலகம் இங்கு அமைய உள்ளதால் இவற்றிற்கு செல்ல சாலையை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக சமூக ஆர்வலர் கோவிந்தராஜன் கூறியதாவது; இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் அதிகமாக நடைபெறுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கார் விபத்தும், இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்த நிகழ்வு செய்திகளிலும், ஊடகங்களிலும் வெளிவந்தும் இன்னும் சரி செய்யப் படவில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதியும் சிரமங்களை போக்கவும் நெடுஞ்சாலைதுறையினரும், நெடுஞ்சாலை துறை அமைச்சரும் சானடோரியம் ஆஞ்சநேயர் கோவில் அருகே நடைமேம்பாலம் அமைத்து தருமாறு பொது மக்களின் சார்பாக கோரிக்கை விடுக்கிறேன் என கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை