மதுரை - திருப்பரங்குன்றம் தேசிய நெடுஞ்சாலையில் 70க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்
மதுரை - திருப்பரங்குன்றம் தேசிய நெடுஞ்சாலையில் 70க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் - விளர்ச்சேரி அருகே கலைஞர் நகர் குடியிருப்பு வாசிகளுக்கு பொதுப் பாதை இல்லாமல், தனி நபர் ஆக்கிரமித்துள்ளதற்கு எதிர்ப்பு. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே கலைஞர் நகர் குடியிருப்பு பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது . பல ஆண்டுகளாக வசித்து வரும் குடியிருப்பு வாசிகளுக்கு , கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தனி நபர் அக்குடியிருப்பவாசிகள் செல்லும் பொது பாதையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்ட முயற்சி செய்ததால், இது குறித்து காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினருக்கு கலைஞர் நகர் குடியிருப்பு வாசிகள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல், அலட்சியப்படுத்தியதால்,
மதுரை - திருப்பரங்குன்றம் தேசிய நெடுஞ்சாலையில் மூலக்கரை என்ற இடத்தில் , 70க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தங்களுக்கு உரிய பாதை அமைத்து தரக்கோரி போராட்டத்தில் குரல் எழுப்பினர் இதனை தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததற்கு பின் போராட்டத்தை கைவிட்டனர். இப் போராட்டத்தினால் அங்கு 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை