மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முன்பாக கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடும் அவலம்
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் ஆலய மேல சித்திரவிதியில், கோயில் முன்பாக பல நாட்களாக கழிவுநீர் பெருக்கெடுத்து சாலையில் குளம் போல தேங்கியுள்ளன. இத்திருக்கோவிலுக்கு, தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர் .இப்படி புகழ்பெற்ற ஆலயத்தின் வாசலில் கழிவு நேரானது சாலைகளை பெருக்கெடுத்து ஓடுகிறது. இது குறித்து, சமூக ஆர்வலர்கள் சிலர் மதுரை மாநகராட்சி சுகாதாரப் பிரிவுக்கு தகவல் தெரிவித்தும், கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வில்லையாம் .
மேலும், இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையானது, இது குறித்து மாநகராட்சி அதிகாரி கவனத்திற்கு கொண்டு சென்று, கோவில் வாசலில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீரை தடுத்து நிறுத்த ஒரே நடவடிக்கை எடுக்க பக்தர்கள் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை