Header Ads

  • சற்று முன்

    திருப்பரங்குன்றம் பசும் நகர் பாசன கால்வாய் இடையே போடப்பட்ட தரை பாலம் இடிந்து சேதம் -ஆபத்தான முறையில் கால்வாயை கடக்கும் பொதுமக்கள் மாணவர்கள்

    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா தேவி நகர் அருகே உள்ள பசும்பொன் நகரில் 20 ஆண்டுகள் பழமையான பாலம் 4  ஆண்டுகளுக்கு முன்பு சேதமடைந்து இடிந்தது விழுந்தது. 

    தற்போது அந்தப் பாலத்தின் வழியே செல்லக்கூடிய இரும்பாலான குடிநீர் குழாய் மீது  அப்பகுதி மக்கள் ஆபத்தான முறையில் இந்த பாதையில் கடந்து வருகின்றனர்.இந்தப் பாதையில் கடக்க முயன்ற போது பொதுமக்கள் , குழந்தைகள் கீழே விழுந்து பாலத்தின் இரும்பு கம்பிகளால் அடிக்கடி காயங்கள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

    தொடர்ந்து அப்பகுதி மக்கள் இந்த வழியாக செல்வதற்காக கம்புகள் கொண்டு தடுப்புகள் கட்டி அந்த வழியாக சென்று வருகின்றனர். மேலும் இந்தப் பாலத்தை சரி செய்து தருமாறு அரசு அதிகாரிகளிடம் பலமுறை அப்பகுதி மக்கள் முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில

    இப்பகுதியை சுற்றி பசும்பொன் நகர், பாலாஜி நகர், தேவி நகர், உள்ளிட்ட பகுதியிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருவதாகவும், மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என ஏராளமானோர் இந்தப் பாலத்தை பயன்படுத்தி வந்தனர்.தற்போது பால முற்றிலும் சேதமடைந்துள்ளதால் 5 கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளதாகவும் கூறுகின்றனர் அப்பகுதி மக்கள் . இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் தனிப்பிரிவு இருக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலத்திற்கு  மனு அளித்துள்ளோம் மாநகராட்சி அதிகாரிகளும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை அப்பொழுது மக்கள் குற்றசாட்டுகின்றனர்.

    மேலும் இந்த பாலத்தை சரி செய்ய நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் மதுரை மாநகராட்சி அதிகாரிகள் இதுவரைக்கும் இந்த பாலத்தை சரி செய்ய நடவடிக்கை வில்லை என்று மக்கள் வேதனையுடன் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad