திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே சாலையோர வியாபாரிகள்திடீர் உண்ணாவிரதப் போராட்டம்
திருப்பரங்குன்றம் போலிஸார் 18 பெண்கள் உள்பட 43.பேரை கைது செய்யப்பட்டு தனியார் மகாலில் வைக்கப்பட்டனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகள் சன்னதி தெருவில் விதிமுறைகளை மீறி கடைகளை வைத்துள்ளதால் காவல்துறையினர் 16 கால் மண்டபம் முதல் திருப்பரங்குன்றம் ஆர்ச் வரை இரண்டு வரிசைகளாக ரோட்டில் இருபுறமும் வைக்க கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏ.ஐ.டி. யு.சி அமைப்பு சார்பில் திருப்பரங்குன்றம் பதினாறுகள் மண்டபத்தில் 18 பெண்கள் உள்பட 50 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர் . இதனை தொடர்ந்து தகவறிந்து திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் லிங்கபாண்டியன் தலைமையில் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் . சாலையோர வியாபாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை