Header Ads

  • சற்று முன்

    மதுரை மாநகராட்சி அலட்சிய போக்கு உடனே நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

    மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட மாநகராட்சி 70 வது வார்டு வானமாமலை நகர் முதல் தெருவில் பாதாள சாக்கடை மூடி உடைந்து கழிவு நீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. மேலும் கோயில் பகுதியில் இந்த நீர் தேங்குவதால் பக்தர்கள் முகம் சுழித்தபடி தூர் நாற்றத்தை கடந்து செல்கின்றனர். பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. 

    துர்நாற்றம் தாங்க முடியவில்லை நோய் தொற்று சிக்கும் அபாயத்தில் பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் செவிடன் காதில் சங்கு ஊதியது போல் இருக்கும் கண்டுகொள்ளாத மாநகராட்சி அதிகாரிகள் எனவும் உடனடியாக அதிகாரிகள் பாதாள சாக்கடை உடைப்பை சரி செய்து சாலையில் கழிவு நீர் தேங்க்காமல் நோய் தொற்றிலிருந்து காக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுகின்றனர்..


    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad