Header Ads

  • சற்று முன்

    மதுரை பாலமேடு அருகே மேட்டுப்பட்டி ஊராட்சியில் மூடாத.கழிவுநீர் கால்வாயால் விபத்து ஏற்படும் அபாயம்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் பாலமேடு அருகே மேட்டுப்பட்டி ஊராட்சியில் கழிவுநீர் கால்வாய்க்கு போடப்பட்ட சிமெண்ட் மேட்டில் நடுவில் துளை போடப்பட்டதால் இந்த நேரமும் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடிய சூழல் இருப்பதாக ஊராட்சி மன்றத்தின் மீது குற்றம் சாட்டுகின்றனர் 

    மேலும் கழிவுநீர் கால்வாயின் மேல் அமைக்கப்பட்ட துளையால் சிறுவர்கள்  கழிவுநீர் கால்வாயில்.விழுந்து விபத்து  ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்து ஊராட்சி மன்றத்தில் பலமுறை முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர்

    மேலும் இரவு நேரங்களில் அதிக அளவிலான நபர்கள் தடுக்கி விழும் சூழ்நிலை உள்ளது.  முக்கிய வீதியான‌ இந்தப் பகுதியில் மேலே துளையிடப்பட்டதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர். நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடிவதில்லை. மேலும் முறையாக கழிவுநீர் கால்வாயை தோண்டாமல் உள்ளதால்  நோய் தொற்றும் அபாயமும் உள்ளது. 

    மழைக்காலம் தொடங்கி விட்ட  நிலையில் ஊராட்சி நிர்வாகமும் அலங்காநல்லூர் யூனியன் நிர்வாகமும் தலையிட்டு உடனடியாக கழிவு நீர் கால்வாயை மூடி.பொது மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்று இந்த பகுதி பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்..

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad