Header Ads

  • சற்று முன்

    ராணிப்பேட்டை கலவை அருகே அரசு சார்பில் கட்டித் தரப்பட்ட தொகுப்பு வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூன்று வயது குழந்தை உட்பட 3 பேர் படுகாயகம்

    ராணிப்பேட்டை கலவை தாலுகா அத்தியானம் ஊராட்சியில் கட்டப்பட்ட தரமற்ற கட்டிடத்தால் இடிந்த அரசு தொகுப்பு வீடு, மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு 

    ராணிப்பேட்டை கலவை அருகே அரசு சார்பில் கட்டித் தரப்பட்ட தொகுப்பு வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூன்று வயது குழந்தை உட்பட 3 பேர் படுகாயங்களுடன் கலவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேல் சிகிச்சைக்காக அஜித் என்பவர் வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதி.

    ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அத்தியானம் கிராமத்தில் இருளர் இன குடியிருப்பு பகுதியில் கடந்த 2016 -17 ஆம் ஆண்டு தமிழக அரசால் கட்டித் தரப்பட்ட தொகுப்பு வீட்டில்  நள்ளிரவு  இரவு 2 மணி அளவில்  விநாயகம் மகன் அஜித் 27,  அஜித்தின் மனைவி செல்வி 25,  மற்றும் இவர்களின் 4 வயதுடைய பெண் குழந்தை ஆகிய மூவரும் அவர்களது  தூங்கிக் கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அந்த தொகுப்பு வீட்டின் இரண்டு பக்கம் சுவர் விடிந்து விழுந்துள்ளது, பின்னர், சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர். இவர்களை மீட்டு கலவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இது குறித்து தகவல்றிந்து வந்த கலவை காவல்துறையினர் மற்றும் வருவாய் ஆய்வாளர் வீரராகவன், கிராம நிர்வாக அலுவலர் கீதா, சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் படுகாயம் அடைந்த அஜித்தை மீட்டு மேல் சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  மேலும் தரமற்ற முறையில்  20 குடும்பங்கள் வசிக்கும் இப்பகுதியில் 7 பேருக்கு மட்டும் அரசு தரப்பில் தொகுப்பு வீடு கட்டி தரப்பட்டுள்ளது. கட்டித் தரப்பட்ட இந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் படுகாயம் அடைந்து அனுமதிக்கப்பட்டுள்ள சில மணி நேரத்தில் அந்த கிராமத்திற்கு இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் மற்றும் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜே.எல். ஈஸ்வரப்பன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து விபத்தில் படுகாயம் அடைந்த குடும்பத்தினரை சந்தித்து அவர்களுக்கு தேவையான அரிசி பருப்பு, உடைகள், போர்வை மற்றும் படுக்கை உபகரணங்களை வழங்கினார்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad