400 ஆண்டு பழமையான பிரசித்திபெற்ற முத்தாலம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்
நிலக்கோட்டை அருகே வீலிநாயக்கன்பட்டியில் 400 ஆண்டு பழமையான பிரசித்திபெற்ற முத்தாலம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்றது..!
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே வீலிநாயக்கன்பட்டி கிராமத்தில் சுமார் 400-ஆண்டுகள் பழமையான பிரசித்திபெற்ற முத்தாலம்மன் கோவிலில் அஸ்டபந்தை மகா கும்பாபிஷேக விழா மேலதாலம் வாணவேடிக்கை முழங்க புனிதநீர் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, சிவாச்சாரியர்களால் ஆறுகால மகா யாகவேல்வி தீபாராதனை மற்றும் சிறப்பு வேல்வி நடத்தப்பட்டு, மூன்று நாட்களாக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு இன்று காலை இராஜகோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது கருட பகவான் வானில் வட்டமிட்டது பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. தொடர்ந்து கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது,
இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை அதிமுக ஒன்றிய செயலாளர் யாகப்பன், துணைச் செயலாளர் நல்லதம்பி, நகர செயலாளர் தென்மொழி சேகர், முன்னாள் வீலிநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தோட்டா முருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். வீலிநாயக்கன்பட்டி விழா கமிட்டி குழு உறுப்பினர்கள் ஆண்டிச்சாமி சுவாமிகள், வெங்கடாஜலபதி, பூசாரி அய்யனன், பிச்சை மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் பி.பி.ஆர் வீருசின்னு முருகன், துணைத் தலைவர் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வைகித்தனர். சுற்றுவட்டாரப்பகுதிகளிலிருந்து ஆயிரக்கனக்கான பொதுமக்கள், பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
கருத்துகள் இல்லை