Header Ads

  • சற்று முன்

    கல்வி கண் காட்சியை காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் துவக்கி வைத்து பார்வையிட்டார்


     வேலூர் பகவான் மஹாவீர் தயாநிகேதன்ஜெயின் பள்ளியில் நடைபெற்ற கல்வி  கண் காட்சியை காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் துவக்கி வைத்து பார்வையிட்டார்

    மாணவர்களின் கல்வி கண்காட்சி விழாவிற்கு வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் அறக்கட்டளை உறுப்பினர் கே.ருக்ஜி ராஜேஸ்குமார் தலைமை தாங்கினார்.  இந்த விழாவில் அவை துணைத்தலைவர் குமரன் ஆர்.சீனிவாசன், அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் எஸ்.சுரேஷ், பள்ளியின் கல்வி ஆலோசகர் ஆர்.கீதா, பள்ளி முதல்வர்கள் கீதா, மாலதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கல்வி  கண் காட்சியை காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் துவக்கி வைத்து பேசினார் மாணவர்கள் இது போன்ற கண்காட்சியில் பங்கேற்று விளக்கம் அளிக்கும் போது அவர்கள் தங்களது பாட சம்பந்தமான தெளிவினை பெறுகிறார்கள்.  எனவே மாணவர்களின் கல்வி திறன் பெற இது போன் கண்காட்சிகள் உதவி புரிகின்றன.  பள்ளி நிர்வாகம் கண்காட்சியினை ஊக்குவித்து நடத்துவது பாராட்டதலுக்குரியது.  இந்த கண்காட்சியில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் அறிவியல் கண்டுபிடிப்புகள் வைக்கப்பட்டிருந்து மேலும் குறிப்பாக மண்ணில்லா விவசாயம் என்ற தலைப்பில் மாணவர்கள் காட்சி படுத்திய பொருட்கள் வியக்க வைத்த்து என்றார்.

    விண்வெளி ஆராய்சி மைய மாதிரி, மெஹஞ்சதோரோ ஹரப்பா நாகரிக மாதிரிகள், கல்லணை, தஞ்சாவூர் பெரிய கோயில் மண்ணில்லா விவசாயம், பசு பாதுகாப்பு மையம் மற்றும் தொட்டி பாலம் போன்ற மாதிகள் தயாரித்து உற்சாகத்துடன் விளக்கம் அளித்தனர்.  இக் கண்காட்சியின் பள்ளியின் 20 அரங்குகளின் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், உள்ளிட்ட அனைத்து பாடங்கள் தொடர்பான கண்காட்சியில் 250 தயாரிப்புகளுடம் 300 மாணவர்களின் பங்கேற்புடன் மிக சிறப்பாக நடைபெற்றது.  பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களும், அவர் தம் பெற்றோர்களும் கல்வியாளர்களும் என 1000க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டு மாணவர்களை பாராட்டினர்.  இதில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.

    வேலூர் மாவட்ட செய்தியாளர் : S . சுதாகர் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad